பிரபல மலையாள திரைப்பட நடிகர் திலீப் சங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எர்ணாகுளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பிரபல மலையாள திரைப்பட நடிகர் திலீப் சங்கர். பல பிரபலமான மலையாள சீரியல்களில் நடித்துள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .
சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்த இவர் ‘பஞ்சாக்னி’ என்ற சீரியலின் படப்பிடிப்புக்காக எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு இரண்டு நாள் நிறுத்தி வைக்கப்பட, அங்கேயே ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார் திலீப் .
Also Read : பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக நிற்பேன் – த.வெ.க தலைவர் விஜய் கடிதம்..!!
இந்நிலையில் அறை எடுத்து தங்கிய அவரை படக்குழு தொடர்புகொள்ள முயன்ற நிலையில் அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து திலீப் தங்கிருந்த அறையை திறந்து பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார் . இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திலீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திலீப் சங்கர் மறைவுக்கு தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.