வயநாடு அருகே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பிரபல தென்னிந்திய நடிகைகள் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு அருகே கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள 6 கிராமங்கள் தடம் தெரியாமல் காணாமல் போனது .
கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் அங்கிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 1000 கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதைந்தும் பலர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது .
கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்ப்பட்ட இந்த துயர சம்பவத்தில் 400கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . பலர் உறவுகளை , வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வயநாடு அருகே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தென்னிந்திய நடிகைகள் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு உதவ கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குஷ்பு, சுஹாசினி, மீனா, லிசி ஆகிய நடிகைகள் இணைந்து 1 கோடி நிதி வழங்கியுள்ளனர்