அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று தங்களது பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை டூர் அழைத்துச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பொதுவாக எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8 மணிநேரம் வேலை வர விடுமுறை கொடுத்து அதற்கான ஊதியத்தை கொடுக்கும் . இதையடுத்து பணியாளர்களை ஊக்கப்படுத்த வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு அல்லது போனஸ் ஆகியவற்றை கொடுத்து மகிழும்.
அந்தவகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதிச்சேவை நிறுவனமான Citadel நிறுவனம் 1200 பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்டுக்கு டூர் அழைத்துச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பயணம், ஹோட்டல், சாப்பாடு என அனைத்து செலவுகளுக்கும் நிறுவனமே பொறுப்பேற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் .சி.இ.ஓ. கென் க்ரிஃபின் தகவல் தெரிவித்துள்ளார் . இந்த சுற்றுலாவுக்கு இந்தியாவின் குர்கான் நகரில் இருந்து இந்நிறுவனத்தின் பணியாளர்கள் சென்றுள்ளனர்