சென்னை புழலில் பதுங்கியிருந்த A+ பட்டியலில் உள்ள ;பிரபல ரவுடியான சேது வை துப்பாக்கி முனையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையி கலக்கி வந்த ரவுடியாக கருதப்படும் 30 வயதாகும் ரவுடி சேது மீது 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது . இந்த போலீசாரின் கண்காணிப்பில் இருந்து மறைந்து தலைவரைவாக வாழ்ந்து வந்த சேது புழலில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .
Also Read : வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கே முன்னுரிமை – கர்நாடக அரசு
இதையடுத்து புழலில் போலீசார் தேடுதல் வேட்டையை தொடர்ந்து வந்த நிலையில் ரவுடி சேதுவை துப்பாக்கி முனையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர் .
ரவுடி சேதுவுடன் A பட்டியலில் இருக்கும் ரவுடியான பிரபு என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . கடந்தாண்டு சோழவரம் அருகே என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணனின் எதிர் தரப்பாக சேது செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.