“அப்போ தளபதி பிறந்தநாளுக்கு ஒன்னுமே கிடையாதா” லேட்டஸ்ட் தகவலால் வருத்தத்தில் ரசிகர்கள்…

தளபதி விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தற்போது முழுவீச்சில் உருவாகி வரும் லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையின் முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது .

முழுவீச்சில் உருவாகி வரும் லியோ படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் கேட்காமலேயே எதிர்பாராத சமயத்தில் லோகேஷ் வெளியிட்டு வருகிறார் . சமீபத்தில் லியோ படத்தில் வேலை செய்த அனைவரையும் பாராட்டும் விதமாக வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது .

இந்நிலையில் தளபதியின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி லியோ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்து வந்தது . இதற்கு முன் லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’விக்ரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ கமலஹாசனின் பிறந்த நாளில் வெளியான நிலையில் விஜய்யின் பிறந்த நாளன்று அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக இந்த வீடியோ வெளியாகும் என கூறப்பட்டது .

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் அன்று லியோ படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வராது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது . ஆனால் இந்த பக்கம் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் இருந்து ஒரு சிற்பபான தரமான அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது .

இதனால் லியோ படத்தின் அப்டேட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த விஜயின் ரசிகர்களுக்கு ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும் தளபதி 68 படத்தில் இருந்தாவது நல்ல செய்தி வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எது எப்படியோ தளபதியின் பிறந்தநாள் அன்று ரசிகர்களை ஏமாற்றாமல் அவர்கள் எதிர்பார்க்கும் எதாவது ஒரு அப்டேட் கிடைத்தால் அது அவர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Total
0
Shares
Related Posts