ITamilTv

அங்கத் ஜஸ்ப்ரித் பும்ராவை வரவேற்ற ஜஸ்பிரித் பும்ரா- குவியும் பாராட்டுக்கள்!

Spread the love

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. ஹைபிரிட் மாடலில் நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடருக்காக இந்திய அணி இலங்கையில் உள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய ஜஸ்ப்ரித் பும்ரா, 16 ரன்கள் எடுத்தார். இதன்பின் மழை பெய்ததால், ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில், நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இன்று விளையாடவுள்ளது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான 5ஆவது லீக் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெற மாட்டார் என்றும், தனிப்பட்ட காரணத்திற்காக அவர் மும்பைக்கு சென்றுள்ளார் என்றும் கூறப்பட்டது.
இதனால் ஜஸ்ப்ரித் பும்ரா எதற்காக அவசரமாக மும்பைக்கு சென்றார் என்ற பதற்றம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் பும்ரா மும்பை திரும்புவதற்காக காரணத்தை தனது இஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ள பும்ரா,


“எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. எங்கள் இதயங்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிரம்பியுள்ளன! இன்று காலை நாங்கள் எங்கள் சிறுவன் அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவுக்கு மேல் இருக்கிறோம், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயம் அனைத்திற்கும் காத்திருக்க முடியாது- ஜஸ்பிரித் மற்றும் சஞ்சனா”
என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கும், டெலிவிஷன் பிரபலமான சஞ்சனா கணேஷிற்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பும்ரா தனது குழந்தைக்கு அங்கத் என்று பெயரிட்டுள்ளார்.


இந்த நிலையில் கிரிகெட் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகிறனர்.


Spread the love
Exit mobile version