சீனாவில் நீண்ட நேரம் டிவி பார்த்த குழந்தைக்கு வினோதமான தண்டனை கொடுத்த தந்தைக்கு தற்போது கண்டங்கள் வலுத்து வருகிறது.
மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது மிக பெரிய நாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ள சீனாவில் 3 வயது பெண் குழந்தைக்கு அவரது தந்தை வினோத தண்டனை கொடுத்துள்ளதற்கு இணையவாசிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
ஜியாஜியா என்ற 3 வயது பெண் குழந்தை தனக்கு பிடித்த சேனலை வைத்து நீண்ட நேரம் தொலைக்காட்சியை ரசித்து பார்த்துள்ளது . அப்போது ஜியாஜியாவின் தந்தை தொலைக்காட்சியை ஆப் செய்யுமாறு கூறிஉள்ளார் ஆனால் அதை கண்டுகொள்ளாத அந்த சிறுகுழந்தை நீண்ட நேரம் தொலைக்காட்சியை பார்த்துள்ளது .
Also Read : விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!!
இதனை கண்டு ஆத்திரமடைந்த தந்தை தான் பல முறை கூறியும் மதிக்காமல் நீண்ட நேரம் தொலைக்காட்சியை பார்த்த 3 வயது குழந்தை ஜியாஜியாவின் கையில் பாத்திரத்தை கொடுத்து, அதனை கண்ணீரால் நிரப்புமாறு தண்டனை கொடுத்துள்ளார் .
சில நிமிடங்களுக்கு பின் பெற்றோர் குழந்தையை சமாதானப்படுத்தினாலும், அவர்களின் இச்செயலை கண்டித்து இணையவாசிகள் பலரும் கண்டிப்புடன் விமர்சித்து வருகின்றனர்