CSK-விற்கு பாராட்டு விழா – சென்னையில் “தல” தோனியின் மாஸ் பேச்சு..!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தோனி சென்னை ரசிகர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கிரிக்கெட் வீரர் தோனி;

சென்னையும், தமிழ்நாடும், எனக்கு அதிகமாக கற்றுக்கொடுத்துள்ளது. சென்னை ரசிகர்கள் மாற்று அணி வீரர்களையும் உற்சாகப்படுத்துவார்கள். அதுதான் அவர்களின் சிறப்பு என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தனது கடைசி டி20 போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்றும், கிரிக்கெட்டில் விளையாடும் இரு அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தவேண்டும் என நினைப்பவர்கள் சென்னை ரசிகர்கள் என புகழாரம் சூட்டினார்.

Total
0
Shares
Related Posts