திருச்சி நீதிமன்றத்தில் இன்று (ஏப்.07) மாலைக்குள் சீமான் ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என மாவட்ட நீதிபதி பாலாஜி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் சீமான் நாளை ஆஜராக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .
கடந்த சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட் போது அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ‘லீக்’ ஆனது. துரைமுருகனுடன் பேசிய சீமான், மூத்த முக்கிய நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசியதாக சில ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது .
அதே சமயம் திருச்சி எஸ்பியாக இருந்த வருண்குமார், நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், சீமான் புகார் கூறியிருந்தார்.
அப்போதிலிருந்து சீமானுக்கும் திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமாருக்கும் இடையில் வெளிப்படையாக மோதல் வெடித்து இன்று வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளது.
Also Read : OTT- யில் வெற்றிகண்டதா டெஸ்ட்..? – சிறப்பு பார்வை..!!
ஒரு கட்டத்தில் இந்த பிரச்னை சற்று எல்லை மீறி நடக்கவே திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து வருண்குமார் ஐபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதற்கு சீமான் பதில் சொல்லியே ஆகவேண்டும் என வழக்கை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் சீமான் இதுவரை ஆஜராகாத நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் இன்று (ஏப்.07) மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என மாவட்ட நீதிபதி பாலாஜி எச்சரிக்கை விடுத்திருந்தார் .
இதையடுத்து சீமான் இன்று ஆஜராவாரா இல்லை கைத்தவரா என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையி சீமான் நாளை ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என சீமானின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்த நிலையில் நாளை காலை 10.30 பணிக்குள் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.