சாலை விபத்துக்குள்ளானவர்களை முதல் 48 மணி நேரத்தில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கு ஆகும் செலவினை தமிழக அரசே இலவசமாக ஏற்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்தும், சாலை உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும், விபத்துக்களைக் குறைப்பதற்கும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, சாலை விபத்துகளுக்கான சிறப்பு சட்டங்கள் இயற்றுவது குறித்தும், புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், நம்மை காக்கும் 48 என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேரத்தில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளை தமிழக அரசே இலவசமாக வழங்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.