இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் வியக்க வைக்கும் வகையில் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம் முழு வீச்சில் உருவாகி வருகிறது.
சென்னையின் அடுத்தகட்ட நகர்வுக்காகவும் சென்னை மக்களின் வசதிக்காகவும் தமிழக அரசு பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . அதில் மெட்ரோ ரயில் திட்டமும் ஒன்று . சென்னை முழுவதும் தற்போது மெட்ரோ ரயில் திட்டம் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஒரு தாறுமாறு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் வியக்க வைக்கும் வகையில் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம் முழு வீச்சில் உருவாகி வருவதாக வீடியோவுடன் கூடிய தகவல் வெளியாகி உள்ளது .
போரூர் – ஆழ்வார் திருநகர் இடையே சுமார் 5 கி.மீ தொலைவுக்கு ஒரே தூணில் இரண்டு அடுக்குகளுடன் இந்த டபுள் டெக்கர் மெட்ரோ பாலம் கட்டப்பட்டு வருகிறது
கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி இடையேயான வழித்தடம் (4th Corridor) மற்றும் மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தட (5th Corridor) ரயில்கள் இதில் இயக்கப்படவுள்ளதக மெட்ரோ ரயில் நிர்வாக தகவல் தெரிவித்துள்ளது.