ஆல்ஃபபெட்டில் உங்கள் பெயரின் முதல் எழுத்து M TO Z வரை இருக்கா..? உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

நியூமராலஜி அடிப்படையில் ஒருவருடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து அவரின் குணம் எப்படி, அவரின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் உங்கள் பெயரின் முதல் எழுத்து அடிப்படையில் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். M முதல் Z வரை…

M என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

அடிப்படையில் நீங்கள் ஒரு ரொமான்டிக்கான ஆள் இல்லை. ஆனாலும், ரொமான்டிக்காக இருக்க முயற்சி செய்வீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் படியான காதல் உங்களுக்கு கிடைக்கும். எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்கும் நீங்கள் உடலுறவு விஷயத்தில் முக்கியத்துவம் தராமல் இருப்பீர்கள். உடலுறவு பற்றிய தெளிவும் இல்லாமல் இருப்பீர்கள்.

N என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

பார்ப்பதற்கு அப்பாவி, அடக்கமானவர், கூச்ச சுபாவம் கொண்டவர் போல நீங்கள் உங்களைக் காட்டிக் கொண்டாலும் காதல் முதல் காமம் வரை அனைத்தும் தெரிந்த, சகலகலா வல்லவர் நீங்கள். உங்கள் துணையும் உங்களின் தகுதிக்கு ஏற்றவராக இருக்க வேண்டும் என அடிக்கடி அவரை விமர்சிக்கும் குணம் கொண்டவராக இருப்பீர்கள்.

O என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

காமத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர் நீங்கள். ஆனால், உங்கள் துணையிடம் அதை வெளிப்படுத்த அதிகம் கூச்சப்படுவீர்கள். அதிக இரக்கம் கொண்ட நீங்கள் உங்கள் துணையிடமும் அதனை எதிர்பார்ப்பீர்கள். பன்முக தன்மை கொண்டவராக இருப்பீர்கள்.

P என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

தழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கும் நீங்கள் உங்கள் இமேஜை காப்பாற்றிக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வெளித்தோற்றத்தில் அதிக அக்கறை கொண்ட நீங்கள், சரியான தோற்றமுடைய துணையை தேடுவீர்கள். அப்படி அமைந்திராத பட்சத்தில் உங்கள் துணையை எதிரியை போல் பார்ப்பீர்கள். இதனால் உங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்.

Q என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

மிகவும் பலசாலியான நீங்கள் உடலுறவு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் உங்கள் துணை உங்களை அணுகுவதற்கு கட்டுப்பாடு விதிப்பவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் நீங்கள் அதிகம் மனம் விட்டு பேசுவது உங்கள் உறவை பலப்படுத்த அதிகம் உதவியாக இருக்கும்.

R என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழிக்கு ஏற்றார் போல அவசரப்பட்டு முட்டாள்தனமாக எதையாவது செய்து சிக்கலில் மாட்டிக் கொள்பவர்கள் நீங்கள். உங்கள் மனம் சொல்வதை கேட்டு நடக்கும் நீங்கள் உங்களுக்கு நல்ல துணை கிடைப்பார். உங்கள் துணையை புரிந்து கொள்ளும் மனப் பக்குவத்தையும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

S என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

ஒருவர் மீது அன்பு செலுத்த துவங்கி விட்டால் எதற்காகவும் அவர்களை பிரிய மனம் இல்லாமல் இருக்கும் குணம் கொண்டவர் நீங்கள். எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். அதனால் வரும் துன்பங்களை கூட சகித்து கொள்வீர்கள். உங்கள் மனதை புரிந்து நடக்கும் வாழ்க்கைத்துணை உங்களுக்கு அமையும்.

T என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

காதலா, லட்சியமா என அடிக்கடி குழம்பும் உங்களுக்கு உடலுறவில் பெரிதாக விருப்பம் இருக்காது. இசை, ரொமான்டிக்கான காதல் உணர்வுகளுக்கு எளிதில் மனம் வசப்படும் நீங்கள், கற்பனையிலேயே அதிகம் வாழக் கூடியவர்கள். குடும்ப பொறுப்புக்களில் சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாக வாழ நினைப்பவர்களாக இருப்பீர்கள்.

U என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

உங்களின் துணை அழகாக இருப்பதை கண்டு மகிழும் நீங்கள் காதலிக்கும் போது உற்சாகமாக, உறுதியாக இருந்தாலும், துணை அருகில் இல்லாத போது அதனை சவாலாக பார்க்கக் கூடியவர்கள். சாகசம், சுதந்திரம் ஆகியவற்றை விரும்புபவராவும் இருப்பீர்கள்.

V என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

எதிலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என நினைக்கும் நீங்கள் அதற்காக தீவிரமாக முயற்சியும் செய்வீர்கள். ஒருவருடன் நெருங்கி பழகுவதற்கு முன் அவரை பற்றி நன்கு தெரிந்து கொள்ள நினைப்பீர்கள். உங்கள் துணைக்கும் உங்களுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும். ஆனாலும், இருவருக்கும் இடையே உள்ள உறவு வலுவானதாக இருக்கும்.

W என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

உங்கள் துணை உங்களிடம் உண்மையாக தான் இருக்கிறாரா என்று அதிகம் சந்தேகப்படும் குணம் கொண்டவர்கள் நீங்கள். உங்களின் ஈகோவால் உங்கள் துணையுடனான உறவில் ஆபத்து வரும். நீங்கள் ரொமான்டிக்கானவராக இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுவீர்கள்.

X என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

எந்த வேலை செய்தாலும் அதில் விரைவாக சலிப்படைந்து விடுவீர்கள். ஒரே நேரத்தில் ஒன்றும் மேற்பட்ட காதல் உறுவுகளை கையாள நினைக்கும் நீங்கள் காதலை மிகப் பெரிய சுமையாக நினைப்பீர்கள். பொறுமையாக இருந்தால் காதல் வாழ்க்கையில் திருப்தி அடையலாம்.

Y என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

அந்த ஒரு செயலையும் நிறுத்தி, நிதானமாக ஆராய்வதற்கு பல மணி நேரம் எடுத்துக் கொள்ளும் நீங்கள் சுதந்திரமான, சிற்றின்பங்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பீர்கள். உங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால் அதை விட்டு விடுவீர்கள். உங்கள் துணையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் நீங்கள், சிறந்த துணை என்பதை உங்கள் துணைக்கு நிரூபிக்க வேண்டியிருக்கும்.

Z என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

சினிமாவில் வருவது போல துணை வேண்டும் என தேடும் நீங்கள் மிகவும் ரொமான்டிக்கான, லட்சியவாதி. காதலை துன்பம் என நினைக்கும் நீங்கள் காதலில் வீழ்வதை வெறுப்பவர்களாக இருப்பீர்கள். ஆனாலும், காம உணர்ச்சி அதிகம் கொண்டவராக இருப்பீர்கள். மேலும், உங்கள் வாழ்க்கை ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டீர்கள்.

Total
0
Shares
Related Posts