110 பயணிகளுடன் சென்ற ரஷ்யா விமானம் கஜகஸ்தானில் விழுந்து வெடித்து சிதறி கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யா நோக்கி இன்று சென்றுகொண்டிருந்தது அப்போது வானிலை மாற்றம் காரணமாக அந்த விமானம் உடனடியாக தரையிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் விமானம் தரையிறங்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கஜகஸ்தான் நாட்டில் விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது .
Also Read : அண்ணா பல்கலை.மாணவி பாலியல் வன்கொடுமை – பதிவாளர் அறிக்கை
இதையடுத்து விமானம் கஜகஸ்தான் நாட்டில் தரையிறங்க முயன்ற போது விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் தற்போது வரை 42 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமான பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் தரையில் மோதி வெடித்து சிதறும் காட்சிகள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.