வெள்ள நிவாரணம் ரூ.6,000 வினியோகம்: தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி (Kanimozhi Karunanidhi) எம்.பி இன்று துவக்கி வைகிறார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் இன்று காலை 8.30 மணி முதல் வெள்ள நிவாரணதொகை ரூ.6,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள், ஸ்மார்ட்ர்டை காண்பித்து நிவாரண தொகையை வாங்கி செல்கின்றனர்.

அந்தவகையில், இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டட் குடும்பங்களுக்கு, 6,000 ரூபாய் நிவாரணம் பணமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : https://itamiltv.com/glowing-face-3-day-facial-whitening-is-well-known-just-follow-it-health-tips-tamil-news-beauty-secrets-tamil-nadu-viral-news/
இன்று (29/12/2023) தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண நிதி வழங்கும் பணியை தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி (Kanimozhi Karunanidhi) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண ரூ.6,000 வழங்கி, துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க : https://itamiltv.com/anbumani-raised-a-question-government-for-unemployed-youth-scholarship/

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.