கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தொடர் மழையால் தேனி மாவட்டமே குளு, குளுவென மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இவ்வாறு பொழிந்து தொடர் மழையால் கும்பக்கரை அருவி, சுருளி அருவி, ‘சின்னச்சுருளி’ என்றழைக்கப்படும் மேகமலை ஆகிய 3 அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த சூழலில், கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடடர்ந்து பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மழைப்பொழிவு குறைந்து அருவிக்கு வரும் நீரின் அளவு வழக்கம் போல குறையும் வரை இந்தத் தடை தொடரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேனியில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் மஞ்சளார் அணையின் நீர்வரத்து 50 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து 50 கனஅடியாக நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது மஞ்சளார் அணையின் நீர் இருப்பு 435.32 மி. கனஅடியாக உள்ளது.