உங்களுக்காகவும் உங்கள் ஊருக்காகவும் இனி உங்கள் வீட்டுப் பிள்ளையான நானும் தவெக தோழர்களும் உங்களுடன் நிற்போம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
பரந்தூரில் பசுமை நிலைய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 910 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த பல கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். களத்தில் அறவழியில் போராடி வரும் மக்களை சீமான், திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என இதுவரை 35 பேர் சந்தித்துள்ளனர் .
இதையடுத்து 36 ஆவது நபராக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
Also Read : காதலன் கொலை – காதலிக்கு மரண தண்டனை வழங்கி கேரள நீதிமன்றம் தீர்ப்பு..!!
அப்போது பேசிய விஜய் கூறியதாவது :
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன். ஆனால் அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் விமான நிலையத்திற்கும் எடுத்திருக்க வேண்டும்.
நான் ஊருக்குள்ள வர்றதுக்கு ஏன் தடை விதிச்சாங்கனு தெரியவில்லை. ஆனால் மீண்டும் உங்கள் ஊருக்குள்ளேயே வருவேன். நம்ம புள்ளைங்க ஒரு நோட்டீஸ் கொடுத்ததுக்குத் தடை விதிக்கிறாங்க.
உங்களுக்காகவும் உங்கள் ஊருக்காகவும் இனி உங்கள் வீட்டுப் பிள்ளையான நானும் தவெக தோழர்களும் சட்டத்துக்குள்பட்டு எல்லா வழிகளிலும் உங்களுடன் நிற்போம். எதிர்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு.. இதே ஆளுங்கட்சியா ஆனா பிறகு விவசாயிகளுக்கு எதிர்ப்பா..? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.