ஊழல் வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி, அவரது கணவருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 5 ஆண்டுகள் சிறை தண்டனை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 1991-96 ஜெயலலிதா அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரா குமாரி, மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்ததாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்திராகுமாரி, கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு வழங்கியது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்
இந்நிலையில் இந்த மேல்முறையீடு வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி, அவரது கணவருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 5 ஆண்டுகள் சிறை தண்டனை செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்திராகுமாரி கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.