புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட் இன்று காலமாகியுள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட் புற்றுநோயால் அவதிபட்டு வந்த நிலையில் தனது 71வது இன்று காலமாகி உள்ளார்.
தனது நெருங்கிய நண்பரும் சக விளையாட்டு வீரருமான அன்ஷுமன் கெய்க்வாட் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தேவையான உதவிகளை பிசிசிஐ செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கோரிக்கை வைத்திருந்தார்.
Also Read : காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி ஏ.கே விஸ்வநாதன் இன்று பணி ஓய்வு..!!
கபில் தேவின் கோரிக்கையை அடுத்து அன்ஷுமன் கெய்க்வாடின் மருத்துவ செலவுக்கு பிசிசிஐ சார்பில் ₹1 கோடி நிதி வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உத்தரவிட்டிருந்தார் .
இந்நிலையில் புற்றுநோயின் விழும்பில் அவதிப்பட்டு வந்த அன்ஷுமன் கெய்க்வாட் இன்று காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு தற்போது இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.