முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது.

former-cricketer-michael-slater-arrested
former cricketer michael slater arrested

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 1993 முதல் 2000ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில்அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் மைக்கேல் ஸ்லாட்டர். இதுவரை 74 டெஸ்ட் போட்டிகள், 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 5,312 ரன்கள் குவித்துள்ளார்.

former-cricketer-michael-slater-arrested
former cricketer michael slater arrested

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் மைக்கேல் ஸ்லாட்டர் பல்வேறு தொலைக்காட்சிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார்.

51 வயதாகும் ஸ்லாட்டர் கடந்த 12-ம் தேதி குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக குடும்ப வன்முறை சட்டத்தில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டு, மான்லி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts