Former Prime Ministers பாரத ரத்னா விருது அறிவிப்பு

Former Prime Ministers
Former Prime Ministers
Spread the love

இந்திய திருநாட்டின் முன்னாள் பிரதமர்களுக்கு (Former Prime Ministers) பாரத ரத்னா விருதினை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் .

இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கிய சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பது குறித்த வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது :

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். நாட்டுக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புக்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக இருந்தாலும், தேசத்தைக் கட்டியெழுப்ப சரண் சிங் எப்போதும் உத்வேகம் அளித்தார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பது குறித்த வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது :

நமது முன்னாள் பிரதமர்பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து பல்வேறு பதவிகளின் மூலம் நாட்டிற்காக அவர் பணிபுரிந்தார்.

நாட்டின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அவர் அமைத்தார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்க இருப்பது குறித்த வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது :

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில்,

இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் எம்.எஸ்.சுவாமிநாதன் முக்கியப் பங்கு வகித்தார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Also Read :https://itamiltv.com/lover-twitter-review-lover-film-won-or-not/

சில தினங்களுக்கு முன்பு பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாய் நாட்டிற்கு அயராது உளது பங்காற்றிய சரித்திர நாயகர்களுக்கு (Former Prime Ministers) பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Spread the love
Related Posts