அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது பிரதமர் தேர்தல் கலைக்கட்டியுள்ள நிலையில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வரும் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் .
இதில் தற்போதையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்க்கும் பலமான போட்டி நிலவி வருகிறது .
Also Read : ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!!
இந்நிலையில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் காயமடைந்துள்ள டிரம்ப் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
இதையடுத்து டிரம்ப் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்தி சிறப்பு பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.