சத்தீஸ்கரில் சன்னி லியோன், ஜானி சின்ஸ் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கரில் திருமணமான பெண்களுக்கு மாநில அரசு மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது . இந்நிலையில் இந்த மாதாந்திர தொகையை பெற நடிகை சன்னி லியோனின் பெயரை பயன்படுத்தி கடந்த 10 மாதங்களாக விரேந்திர ஜோஷி பெற்று வந்துள்ளார் .
நடிகை சன்னி லியோனின் கணவராக நடிகர் ஜானி சின்ஸின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவர இதுகுறித்து முறைப்படி காவல்நிலையில் புகார் கொடுக்கப்பட்டது.
Also Read : காதலியுடன் ரகசிய பேச்சு – கத்தியின்றி ரத்தமின்றி நண்பனின் கதையை முடித்த காதலன்..!!
பின்னர் விரேந்திர ஜோஷி மீது மோசடி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரின் வங்கி கணக்கையும் முடக்கி அவரிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சத்தீஸ்கரில் ஒருவர் நடிகர் நடிகைகளின் பெயரை பயன்படுத்து அரசை ஏமாற்றிய சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.