மழை பாதிப்பு முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், போரூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில், உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அதன் பின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர்,
மழை பாதிப்பு முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் ஸ்மார்ட் சிட்டி, மழைநீர் வடிகால் திட்டங்களில் சொல்ல முடியாத அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.