கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 16 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது (free lpg cylinders).
இதையடுத்து, பெங்களூருவில் பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டு உள்ளார்.
அதில், வறுமைக்கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தினந்தோறும் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும் எனவும், யுகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது தலா ஒரு சமையல் கேஸ் சிலிண்டர் (free lpg cylinders) வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
மேலும், உயர்மட்டக்குழுவின் பரிந்துரைகளின்படி, பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது, மூத்த குடிமக்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை செய்வது உள்ளிட்ட வாக்குறுதிகளும் அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
அதேபோல், அடல் ஆகார கேந்திரா திட்டத்தின் கீழ் அனைத்து வார்டுகளிலும் மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படும் எனவும், வீடு இல்லாதவர்களுக்கு 10 லட்சம் இலவச வீடுகள் கட்டித் தரப்படும் போன்ற வாக்குறுதிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.