Site icon ITamilTv

மதுரையில் நிலை தடுமாறிய சரக்கு ரயில்… தடம் புரண்டு விபத்து..! பலி ..?

Spread the love

மதுரையில் இருந்து வட மாநிலங்களுக்கு டிராக்டர்களை ஏற்றிச் செல்லக்கூடிய சரக்கு ரயில் ஆனது மதுரை ரயில் நிலைய நடைமேடை மூன்றில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்தநிலையில் இரண்டு பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்று மோதி தண்டவாளத்தில் இருந்து விலகியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் விபத்து ஏற்பட்ட சரக்கு ரயிலில் அப்புறப்படுத்தும் பணியில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் அதனை செய்தி எடுக்கச் சென்ற ஒளிப்பதிவாளர்கள் செய்தியாளர்கள் வலுக்கட்டாயமாக ரயில்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர்கள் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ரயில்வே போலீஸ் மூலம் அழிக்க மதுரை கோட்ட மேலாளர் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


Spread the love
Exit mobile version