Site icon ITamilTv

போதை மருந்து கொடுத்து மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவர் – பகீர் சம்பவம்!

Spread the love

பிரான்ஸ் நாட்டில் ஒருவர் தனது மனைவியை கடந்த 10 ஆண்டுகாலமாக போதை மருந்து (drugs) கொடுத்து 80க்கும் மேற்பட்டோர் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏவிக்னான் பகுதியைச் சேர்ந்த டோம்னிக் பி என்ற நபருக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில்,அவரும் அவரது மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டு காலமாக டோம்னிக் தனது மனைவிக்கு உணவில் போதை மருந்தை (drugs) கலந்து கொடுத்து அந்நியர்களை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ படம் பிடித்து வைத்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 83 நபர்களால் 92 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட 51 பேரை காவல் துறையினர் அடையாளம் கண்ட நிலையில், இவர்களில் 26 முதல் 73 வரை உள்ளவர்கள் அடக்கம் எனவும், இதற்காக ஆன்லைனில் தளம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நபர்களுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக யாரும் புகையிலை பயன்படுத்த கூடாது, வாசனை திரவியங்களை போட்டுக்கொள்ளக்கூடாது என்றுள்ளார். இதன் மூலம் மயக்கத்தில் இருக்கும் மனைவிக்கு சந்தேகமோ மயக்க நிலையில் மாற்றம் ஏற்பட்டு விழித்து விடக்கூடாது என்பதை கவனமாக பார்த்து வந்துள்ளார்.

அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வரக்கூடாது என அந்நிய நபர்களின் வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தாமல் தள்ளி வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை இவர் USB கருவியில் ABUSES என்ற பெயரில் பைல்லாக வைத்து ஸ்டோர் செய்துள்ளார்.

இவரது நடவடிக்கைகள் தொடர்பாக பிரெஞ்சு காவல் துறையினருக்கு கடந்த 2020ம் ஆண்டிலிருந்து சந்தேகம் ஏற்படவே விசாரணையை தொடங்கியது. அப்போது தான் இந்த திடுக்கிடும் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகத் தொடங்கியது.

இந்நிலையில் இதுகுறித்து முழு உண்மைகள் மனைவிக்கு தெரியவரவே அவர் உடனடியாக விவாகரத்து பெற்றார். இத்தகைய பகீர் குற்றச்செயலில் ஈடுபட்ட டோம்னிக்கை கைது செய்த பிரெஞ்சு காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Spread the love
Exit mobile version