இறந்தநாளாக மாறிய பிறந்தநாள்.. – கேக் ஊட்டி கொன்ற நண்பர்கள்..! – அதிர்ச்சி வீடியோ

சமூக வலைதளங்களில் பரவி வீடியோவில் நண்பர்கள் அனைவரும் சக நண்பனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ’பர்த்டே பாஷ்’ கொடுத்த போது பிறந்தநாள் கொண்டாடிய நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சி.சி.டி.வி-யில் பதிவான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சாலையில் ஓராமாக நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். அந்த கூட்டத்தில் ஒருவருக்கு அன்று பிறந்தநாள்.

கேக் வெட்டும் அந்த நபருக்கு நண்பர் ஒன்று கூடி பர்த்டே பாஷ் கொடுக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மயக்கமடைந்துவிடுகிறார். உடனடியாக தண்ணீரை எடுத்து முகத்தில் அடிக்கின்றனர் அப்போது அவர் எழவில்லை.

இதனால் அச்சமடைந்த நண்பர்கள் உடனடியாக மயக்கமடைந்தவரை இருசக்கர வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுடன், வீடியோ முடிவடைந்துவிடுகிறது.

இந்த சம்பவம் குறித்து வீடியோ காண்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஆனால் இது உண்மையா என்கிற கேள்வி எழுந்துள்ளது. காரணம் வீடியோவின் துல்லியம், சிசிடிவி காட்சிகள் துல்லியமாக பதிவாகியுள்ளதால், இது மக்களை ப்ராங்க் செய்வதற்காக பதிவு செய்யப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts