Fruits with low glycemic index : சர்க்கரை நோய்/ நீரிழிவு நோய் :
நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது.
சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, இது குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல்லை.
சர்க்கரை நோய் ஒளிந்திருந்து உயிரைக் குடிக்கும். தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், இந்த சர்க்கரை நோய் தான்.
எனவே, உரிய நேரத்தில் கண்டுபிடித்து அதற்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
இந்தியர்களுக்கு மரபுரீதியில் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால்,
35 வயதை தாண்டிய அனைவரும் ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பக்கவாதம், கண்ணில் விழித்திரை பாதிப்பு, மாரடைப்ப, சிறுநீரக செயலிழப்பு, ஆண்மை குறைவு, கை மற்றும் கால்களில் வேதனை போன்ற பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது, ரத்த பரிசோதனை மூலமாக மட்டுமே இதனை கண்டு பிடிக்க முடியும்.
மேலும் சர்க்கரை நோய் வந்தவர்கள் சரியான பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை காலம் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம்.
இதையும் படிங்க : ஓட்டு போடவே மாட்டோம்.. தேர்தலை புறக்கணித்த கிராமம்… வெறிச்சோடிய வாக்குச்சாவடி!
உணவு முறை என்று எடுத்தாலே முதலில் அனைவரும் கூறுவது சர்க்கரை நோயாளிகள் பழங்கள் எடுத்து கொள்ள கூடாது என்பதே ஆகும்.
ஏன் சாப்பிட கூடாது? Fruits with low glycemic index
காரணம் பொதுவாக பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸ் (GI) அளவு அதிகம் இருக்கும், இவை சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததல்ல.
எனவே கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள பழங்களை அவர்கள் எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற சில பழங்களை பற்றி பார்க்கலாம்.
ஆரஞ்சில் GI மற்றும் கொழுப்பு மிகவும் குறைவு, மேலும் வைட்டமின் சி அதிகம் என்பதால் இந்த பழத்தை சாப்பிடலாம்.
தர்பூசணியில் 95 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை ஸ்னாக்சாக எடுத்து கொள்ளாம்.
மாதுளையில் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும்.
கை மற்றும் கால்களில் வேதனை போன்ற பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது, ரத்த பரிசோதனை மூலமாக மட்டுமே இதனை கண்டு பிடிக்க முடியும்.
மேலும் சர்க்கரை நோய் வந்தவர்கள் சரியான பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை காலம் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம்.
உணவு முறை என்று எடுத்தாலே முதலில் அனைவரும் கூறுவது சர்க்கரை நோயாளிகள் பழங்கள் எடுத்து கொள்ள கூடாது என்பதே ஆகும்.
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள எலாஜிக் அமிலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைப் பராமரிக்க உதவுவதால் இதனை நோயாளிகள் தைரியமாக எடுத்து கொள்ளலாம்.
கொய்யாவில் GI மிகவும் குறைவு மற்றும் இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
கிரான்பெரியில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட், நார்ச்சத்து சிறுநீர் பாதை தொற்றை சரி செய்யும், செல் சிதைவடைவதைத் தடுக்கிறது மற்றும் இதயம் மற்றும் நரம்பு பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.
இதையும் படிங்க : அனைத்து இடங்களிலும் நல்லபடியாக வாக்குப்பதிவு – சாஹூ