வினை தீர்க்கும் விநாயக பெருமானின் ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்வோம்…
விநாயகர் சதுர்த்தி :-
விநாயகரின் அவதார தினமாக ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பாரத நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி மிகவும் பிரம்மாண்டமாக கோலாகலமாக கொண்டாடப்படும்.!
பலரும் கூடி பெரிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு அதனை ஒன்றை நாள் ஐந்தாம் நாள் ஏழாம் பத்தாம் நாள் என கடற்கரை நதி, ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாகும்….
இந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
பூஜைக்கு உகந்த நேரம் காலை 10 ;45 முதல் 1;20 ஆகும்.
இதையும் படிங்க : விநாயகரின் வாகனமாக எலி வந்த கதை தெரியுமா?
இதில், காலை 6 மணி முதல் 7.50 மணி வரையிலான நேரத்தில், வாஸ்து நேரமும் இணைந்து வருகிறது (வாஸ்து நேரம் 7.23 முதல் 7.59 மணி வரை). எனவே இந்த நேரத்தில், பூஜைகள் செய்வது நூறு மடங்கு பலன்களைத் தரும்.
அதைவிடுத்து, 9 மணி முதல் 10.30 மணி வரை ராகுகாலம். எனவே காலை 10.35 முதல் 11.45 மணி வரையிலான நேரத்தில், விநாயகருக்கு பூஜைகள் செய்யலாம்.
தடைகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கிடு வார் ஆனைமுகத்தான். ஆற்றலையும் ஞானத்தை யும் தந்து அருளுவார். கவலைகளெல்லாம் காணாமல் போக, கணபதி பெருமானை வணங்குவோம்….
குறிப்பிட்ட திதியில் அந்தந்த கணபதியை வணங்கிவிட்டு, வேலையை துவங்கினால் வெற்றி நிச்சயம்….