”பாஜக 10 வருஷத்துக்கு முன்னாடி..” அண்ணாமலையை விமர்சித்து உதயநிதிக்கு குரல் கொடுத்த காயத்ரி!!

பாவ யாத்திரையை பாதி வழியில் நிறுத்திவிட்டு விடுமுறை எடுத்து விளம்பரத்திற்காக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பொய்களை பரப்புவதன் மூலம் இந்தியா முழுவதும் பொய் பிரச்சாரம் ஆடு செய்கிறது என்று முன்னாள் பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில்சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி டெங்கு ,கொரனோ ,மலேரியா இதை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது அதனை ஒழித்து கட்ட வேண்டும். அப்படி தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்க்க கூடாது அதனை ஒழுத்து கட்டவேண்டும் என்று பேசியிருந்தார்.அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சு பாஜவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருந்தார். “தமிழக பிரச்னை குறித்து பேசாமல், ‘இந்தியா’ கூட்டணி குறித்து பேச முதல்வர் புறப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டியை தாண்டி திமுக எதுவும் செய்ய முடியாது.

மோடி சமூகம் குறித்து எப்படி பேசினாரோ அதேபோலதான், சனாதனம் குறித்தும் உதயநிதி பேசியுள்ளார். கடந்த 6 முறை ஆட்சியிலிருந்தும் சமூகநீதியை திமுகவால் கொண்டுவர முடியவில்லையா?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்திருந்தார்.

பாவ யாத்திரையை பாதி வழியில் நிறுத்திவிட்டு விடுமுறை எடுத்து விளம்பரத்திற்காக ஆடு செய்கிறது என்று காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

சனாதன தர்மம்- “நித்திய தர்மம்”, “நித்திய மதம்” அல்லது “நித்திய ஒழுங்கு”ஆம், இது ஒரு பெரிய தலைப்ப. நேர்மை, உயிர்களை காயப்படுத்தாமல் இருத்தல், தூய்மை, நல்லெண்ணம், கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, சுயக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, துறவு போன்ற நற்பண்புகள் பொதுக் கடமைகளில் அடங்கும். பாஜகவுக்கு இவற்றில் ஏதேனும் குணம் கிடையாது. குறிப்பாக கலவரங்களில் மற்றவர்களை கொல்வது.

வர்ணாஷ்ரம-தர்மம் (சாதி அமைப்பு) உள்ளது, இது சனாதன தர்மத்தின் தலைப்புகளில் ஒன்றாகும். தென்னிந்தியாவை விட வட இந்தியா அதைப் பின்பற்றுகிறது. தென்னிந்திய- வளர்ச்சி, சமத்துவம், ஒற்றுமை, சுதந்திர உரிமைகள், சமூக நீதியை நோக்கி நகர்கிறது. வடக்கில்தான் அதிக தலித்துகள் மற்றும் பிராமணர்கள் கொல்லப்படுகிறார்கள். சாதி அமைப்பு மட்டுமே காரணம்.

பிஜேபி முன்னிலையும் வந்தால் தமிழகம் வளர்ச்சியில் பின்னோக்கி செல்லும், மேலும் கலவரங்கள், அமைதியின்றி, பலாத்காரங்கள், ஜாதி சண்டைகள், கொள்ளை, கொலை, திருட்டு, அச்சுறுத்தல்கள் அதிகம் நடக்கும். இந்துக்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. மேலும், வடக்கின் கட்டளைகளுக்கு கீழ்படிவதை விட தமிழ் உணர்வுடன் வாழ்வது நல்லது.

சோர்வு மற்றும் ஓபி அடித்ததாலும் பாவ யாத்திரையை பாதி வழியில் நிறுத்தினார் விடுமுறை எடுத்ததாலும் இப்போது விளம்பரத்திற்காக இந்தியா முழுவதும் பொய் பிரச்சாரம் ஆடு செய்கிறது. அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பொய்களை பரப்புவதன் மூலம் பேசி பிரபலம் அடைய அண்ணாமலை முயற்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார் .

Total
0
Shares
Related Posts