பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூரில் நேற்று தனது தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.அதில்,
உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்துதல்:
அரியலூர்-பெரம்பலூர்-துறையூர்-நாமக்கல் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
குளித்தலை நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
புள்ளம்பாடி மற்றும் லாலாப்பேட்டையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
சுற்றுலாவை மேம்படுத்துதல்:
இரஞ்சன்குடி கோட்டை, வாலிகண்டபுரம் கோவில் மற்றும் சாத்தனூர் கல்மரப் பூங்கா ஆகிய தொன்மையான இடங்களை சுற்றுலாத் தலங்களாக தரம் உயர்த்தப்படும்.
பச்சமலை மற்றும் புளியஞ் சோலையில் சூழலியல் (ECO TOURISM) மேம்படுத்தப்படுவற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை:
காவிரி ஆற்றின் உபரி நீர் சிக்கதம்பூர் ஏரியை நிரப்பவும், நிலையான நீர் மேலாண்மையை உறுதி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
காவிரி ஆற்றில் இருந்து குளித்தலை தொகுதியில் உள்ள பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் நிரப்ப தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது – அண்ணாமலை கிடுக்குப்பிடி கேள்வி
திருஉருவ சிலைகள் அமைத்தல்:
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கூகூர் கிராமத்தில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையருக்கு வெண்கல சிலை டாக்டர் பாரிவேந்தரின் சொந்த நிதியில் நிறுவப்படும்.
வீரன்” சுந்தரலிங்கம் குடும்பனாரின் நினைவைப் போற்றும் வகையில் துறையூர் ரவுண்டானா பகுதியில் வெண்கலச் சிலை டாக்டர் பாரிவேந்தரின் சொந்த நிதியில் நிறுவப்படும்.
போதை மறுவாழ்வு மையங்கள் அமைத்தல்:
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதியிலும் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.
கல்வியை மேம்படுத்துதல்:
லால்குடி மற்றும் குளித்தலையில் தலா ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
துறையூரில் உள்ள பச்சமலையில் சைனிக் பள்ளி அமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்.
SRM கல்வி அறக்கட்டளை மற்றும் SRM பல்கலைக் கழகத்துடன் இணைந்து “வேந்தரின் இலவச உயர்கல்வி” திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவியர் 1200 பேருக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும்.
இதையும் படிங்க: ” அதிமுக தொண்டர்கள் அனைவரும் அண்ணன் தினகரன் பக்கம்தான்..”- அண்ணாமலை பேச்சு !
மேம்படுத்தப்பட்ட மருத்துவம்:
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1500 ஏழை எளிய குடும்பங்களுக்கு SRM மருத்துவமனை மற்றும் மருத்துவ நிறுவனங்களின் மூலம் தலா ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் மதிப்பிற்கு இலவச உயர் சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டு வழங்கப்படும் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் இடையே புதிய ரயில்பாதை திட்டம் நிறைவேற்றப்படும்.
தொகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் தரம் உயர்த்தப்படும். 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உடற்பயிற்சி மையங்கள், போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே முசிறி, தொட்டியம் பகுதியில் தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குளித்தலை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
ரஞ்சன்குடிகோட்டை, வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில், சாத்தனூர் கல்மர பூங்கா, பச்சமலை, புளியஞ்சோலை ஆகிய சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும். மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி மற்றும் பெரம்பலூர் சின்னவெங்காயத்துக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி- மண்ணச்சநல்லூர்- துறையூர் – சேலம் வழித்தடம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும். நெ.1 டோல்கேட்- முசிறி சாலை நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்தப்படும். எனது சொந்த நிதியில் கூகூர் கிராமத்தில் பெரும்பிடுகு முத்தரையருக்கும், துறையூரில் வீரன் சுந்தரலிங்கனாருக்கும் வெண்கல சிலை அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.