பிரபல செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார்..!

பிரபல தூர்தர்சன் சிறந்த செய்தி தொகுப்பளர் கீதாஞ்சலி ஐயர் (gitanjali aiyar) உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

இந்தியாவின் முதல் பெண் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கீதாஞ்சலி ஐயர் (gitanjali aiyar) சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

கீதாஞ்சலி ஐயருக்கு பார்கின்சன் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பிறகு திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, தூர்தர்சனில் 1971 முதல் பணியாற்றி வந்த கீதாஞ்சலி ஐயர் பல தசாப்தங்களாக மக்களின் மனம் கவர்ந்த செய்தி வாசிப்பாளராக இருந்தார். சிறந்த ஆங்கில உச்சரிப்பிற்க்கு பெயர் போன இவரின் செய்தி வாசிப்பிற்கு நான்கு முறை சிறந்த செய்தி தொகுப்பாளர் விருதைப் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல், 1989 இல் சிறந்த பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் வென்றுள்ளார். மேலும், தேசிய நாடகப் பள்ளியில் டிப்ளமோ பட்டமும் பெற்றுள்ளார்.

பல விளம்பரங்களிலும் மற்றும் ஸ்ரீதர் ஷிர்சாகரின் “கந்தான்” என்கிற தொலைக்காட்சி தொடரிலும் கீதாஞ்சலி ஐயர் நடித்துள்ளார்.

இந்நிலையில், செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts