இந்திய ரிசர்வ் வங்கி (RBI) “இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளித்து உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ரூபாயில் உலகளாவிய வர்த்தக சமூகத்தின் அதிகரித்து வரும் ஆர்வத்தை ஆதரிப்பதற்கும்” சர்வதேச வர்த்தகத்தை ரூபாயில் தீர்த்து வைப்பதற்கான ஒரு வழிமுறையை அமைத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளை அடுத்து இந்திய நாணயத்தின் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளதை அடுத்து மத்திய வங்கியின் இந்த நடவடிக்கையின் காரணம் என தெரிவித்துள்ளது.
சில நாடுகளுடனான வர்த்தகத்திற்காக அமெரிக்க டாலர் போன்ற உலகளாவிய நாணயத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் விதிகளைத் தவிர்ப்பதற்கு, RBI பொறிமுறையானது இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்த ஏற்பாட்டின் கீழ் அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளும் ரூபாயில் (INR) குறிப்பிடப்பட்டு விலைப்பட்டியல் செய்யப்படலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் இரு வர்த்தக நாடுகளின் பணத்திற்கு இடையிலான மாற்று விகிதங்களை சந்தை நிலவரத்தின் மூலம் தீர்மானிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது