ITamilTv

“அமீர் – சுதா கொங்கரா இடையே கலகம் மூட்டிய ஞானவேல் ராஜா” பருத்திவீரனை புகழ்ந்து திடீர் பதிவு போட்ட சுதா கொங்கரா..

Spread the love

இயக்குநர் அமீர் இயக்கிய ராம் திரைப்படத்தைப் பற்றி ‘மேக்கிங் வரை, ஒன்னும் வரல’ என சுதா கொங்கரா கமென்ட் அடித்ததாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கருத்து தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில் தற்போது இந்த புறம்பேச்சுகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் சுதா கொங்கரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் சுதா கொங்கரா கூறியதாவது :

பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன் .எனக்கு அந்த சம்பவம் நன்றாக நியாபகம் இருக்கிறது.

இறுதிச்சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் (அமீர்) ஒருவர்… நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்… என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகியின் பாதிப்புதான் என்று.

ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன்.

நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாறு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை… இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி என தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version