GOAT பட விவகாரத்தில் பிளக்ஸ், பேனர்கள் வைப்பதற்கு காவல்துறை அனுமதி பெறத் தேவையில்லை, உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 68 வது திரைப்படமாக உருவாகி உள்ள திரைப்படமே தி கோட் .
AGS நிறுவனத்தின் மாபெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து இப்படத்தில் பிரஷாந்த் , பிரபுதேவா , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
Also Read : முடிவுக்கு வந்தது IC – 814 – THE KANDAHAR HIJACK வலைதள தொடரின் சர்ச்சை..!!
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை உலகம் முழுவது, உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் ‘கோட்’ திரைப்படத்தின் காட்சியின் போது பிளக்ஸ், பேனர்கள் வைப்பதற்கு காவல்துறை அனுமதி பெறத் தேவையில்லை, உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.