ITamilTv

GOAT Update வெங்கட் பிரபு பகிர்ந்த வைரல் புகைப்படம்

Spread the love

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள (GOAT Update) கோட் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

லியோ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு பின் தளபதி நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் தளபதி 68 .

ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் இப்படத்திற்கு BGM கிங் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் தளபதி 68-ன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது .

‘The Greatest Of All Time’ என தலைப்பிட்டுள்ள இந்த படத்தில் தளபதி விஜய் இரு வேடங்களில் நடிப்பது படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது .

இந்நிலையில் இப்படம் குறித்த அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது நமக்கு ஒரு சூப்பர் டூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

மின்னல் வேகத்தில் உருவாகி வரும் இப்படத்திற்காக யுவன் ஏற்கனவே சில பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

இதற்கிடையில் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவில் இருந்து ‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read :https://itamiltv.com/actress-revathi-jai-sri-ram-insta-post-viral-about-ayodhya-ram-temple-open/

அதிலும் குறிப்பாக இந்த பதிவின் பின்னணியில் அவர் கமல்ஹாசன் நடித்த ’தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தின் பாடலையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(GOAT Update) மேலும் தற்போது வரை 5 முதல் 6 ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு இருப்பதாகவும் இன்னும் அதிக காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய இருப்பதாகவும்.

இப்படத்தின் கதையே செம சூப்பரான கதை என்றும் எமோஷனல், ஆக்சன் மற்றும் ஒரு டைம் டிராவல் கதையாக இது இருக்கும் என கோட் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

GOAT Update

Spread the love
Exit mobile version