துணி வாங்கினால் ஆடு இலவசம்? துணிக்கடையின் தீபாவளி பரிசு!

goats-are-free-if-you-buy-clothes-for-diwali
goats are free if you buy clothes for diwali

திருவாரூரில் துணிக்கடை ஒன்று பரிசுப் பொருட்களில் இரண்டாவது பரிசாக நான்கு பேருக்கு ஆடு தருவதாக வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நவம்பா் 4-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் புத்தாடை, வீட்டுக்கு தேவையான பொருட்கள வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் துணி வகைகள், வீட்டு உபயோகப் பொருட்களை போன்ற பரிசுப்பொருட்களை குலுக்கல் முறையில் வியாபாரிகள் வழங்குவது வழக்கம்.
அந்தவகையில் திருவாரூரில் சாரதாஸ் என்ற துணிக்கடை ஒன்று பரிசுப் பொருட்களில் இரண்டாவது பரிசாக நான்கு பேருக்கு ஆடு தருவதாக வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

goats-are-free-if-you-buy-clothes-for-diwali
goats are free if you buy clothes for diwali

நியூ சாரதாஸ் துணி கடையை கடந்த 17 வருடமாக திருவாரூரில் நடத்தி வரும் மனிமுருகன் என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குலுக்கல் பரிசு வழங்கி வருகிறார் அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பரிசு ஒருவருக்கு 4 கிராம் தங்கம், 2 முதல் 4வது பரிசு வரை 4 பேருக்கு ஆடு. 5 வது பரிசு 25 பேருக்கு பட்டுப்புடவை பரிசாக அறிவித்துள்ளார்.
இவற்றில் ஆடுகளை பரிசாக அறிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Total
0
Shares
Related Posts