சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து, ரூ.42,320-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.66 குறைந்து ரூ.5290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.42,848-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.4 குறைந்து ரூ.5356-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.
வெள்ளி விலையை பொறுத்த வரையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று ரூ.2 குறைந்து ரூ.73.50-க்கும் கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.73,500-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.50 காசுகள் குறைந்து ரூ.75.50-க்கும் கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.75500-க்கும் விற்பனையானது.