ITamilTv

சென்னையில் திடீரென சரிந்த தங்கம் விலை – எவ்வளவு தெரியுமா?

Spread the love

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 அதிகரித்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,410ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


Spread the love
Exit mobile version