சென்னை விமான நிலைய குப்பை தொட்டியில் 90 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் ( gold smuggling ) செய்யப்பட்டுள்ள சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துபாயில் இருந்து வந்த விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட தங்கக் கட்டிகளை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டுவர ஒரு பயணி முயற்சித்துள்ளார் . ஆனால் அது சாத்தியமில்லை என தெரிந்ததும் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அங்கும் இங்கு சுற்றி திரிந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கழிவறைக்குள் சென்ற அந்த பயணி தான் கடத்தி கொண்டு வந்த தங்கக்கட்டிகளை அருகில் இருந்த குப்பை தொட்டிக்குள் போட்டுவிட்டு சென்றுள்ளார்.
இதனை பார்த்து விமநிலைய துப்புரவு பணியாளர் சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார் . தகவல் அறிந்து உடனே வந்த சுங்கத்துறை அதிகாரிகள் சுமார் 90 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து குப்பை தொட்டியில் வீசிச்சென்ற நபரை சிசிடிவி உதவியுடன் ( gold smuggling ) சுங்க அதிகாரிகள் தேடி வருகின்றனர்.