ITamilTv

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… காரணம் என்ன..!

Spread the love

சென்னையில் தங்கம் விலை (gold rate) ஒரு சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்து ரூ.43,120ஆக அதிகரித்து உள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும், கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை தினமும் ரூ.500 அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், இன்று ஒரு கிராம் 520 ரூபாய் உயர்ந்து உள்ளது.

இதற்கு அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவால் அறிவிப்பு வெளியானது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சிலிக்கான் வேலை பேங்க் மற்றொன்று சிக்னேச்சர் பேங்க் இவை இரண்டு வங்கிகளுமே அமெரிக்காவில் இருக்கக்கூடிய முக்கியமான வங்கிகளில் ஒன்று.

இந்த சூழ்நிலையில், இந்த இரண்டு வங்கிகளுமே திவாலான சூழ்நிலையில் அங்கு இருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் அவர்களிடம் இருக்கும் பணத்தை மேலும் பாதுகாப்பாக வைப்பதற்கு தொடர்ந்து தங்கத்தை நாடி வருகிறார்கள்.

gold rate

இதன் காரணமாக தங்கத்தின் விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவிலும் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

மேலும், வரக்கூடிய நாட்களில் மேலும் பல வங்கிகள் திவால்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முதலீட்டாளர்கள் இடையே இருக்கும் பயத்தின் காரணமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலை குறைந்தால் தான் தங்கம் விலை (gold rate) குறைய வாய்ப்பு இருக்கிறது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், தற்போதைய நிலையில், வரக்கூடிய நாட்களில் தங்கத்தின் விலையில் அதீத ஏற்ற இறக்கங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்பது நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


Spread the love
Exit mobile version