தினம் தோறும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம்.அதன் படி இன்று தங்கத்தில் விலை சற்று அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் விலை உயர்ந்து 4ஆயிரத்து 508 ரூபாய்க்கும், ஒரு சவரன் 120 ரூபாய் விலை அதிகரித்து 36 ஆயிரத்து 64 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்த வரையில், கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து 68 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.