இன்றைக்கே தங்கம் வாங்கிடுங்க – இது தான் காரணம்!

gold-rate-tamil-nadu
gold rate tamil nadu

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 736 ரூபாய் குறைந்துள்ளது.

சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி முதல் தங்கத்தின் விலையில் தொடர் சரிவு காணப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ஒரு சவரன் ரூ.35,320க்கு விற்கப்பட்டது. 17ம் தேதி மேலும் சரிவை சந்தித்து ஒரு சவரன் ரூ.34,968க்கும், 18ம் தேதி சவரன் ரூ.16 குறைந்து ஒரு சவரன் ரூ.34,952க்கும் விற்கப்பட்டது.

gold-rate-tamil-nadu
gold rate tamil nadu

19ம் தேதி ஞாயிறு விடுமுறை காரணமாக தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி அதே விலையில்  விற்பனையானது. இந்நிலையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,360க்கும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.34,880க்கும் விற்பனையானது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில் இன்னும் தங்கம் விலை குறைய அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Total
0
Shares
Related Posts