ITamilTv

மீண்டும் விலை உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

Spread the love

கடந்த ஒரு வாரமாக குறைந்த வந்த தங்கத்தின் விலை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது (gold silver rate).

2023 ஆண்டின் தொடக்கத்தில், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் (gold silver rate), கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்நிலையில், நேற்று ஒரு கிராம் ரூ. 5201 என விற்பனையான தங்கத்தின் விலை, இன்று சற்று உயர்ந்து உள்ளது.

இந்த மாதத்தில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரு கிராம் ரூ. 5201 என விற்பனையான தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ள நிலையில், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6 அதிகரித்து 5,569 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

gold silver rate

மேலும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 48 அதிகரித்து ரூ. 44,552 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.6 அதிகரித்து ரூ. 5,207க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ. 48 வரை குறைந்து ரூ. 41,656 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா அதிகரித்து ரூ. 69.20க்கும், 1 கிலோ வெள்ளி ரூ. 69,200க்கும் விற்பனையாகிறது.

 


Spread the love
Exit mobile version