தங்கத்தாலான ஓலா S1 Pro ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஓலா ஸ்கூட்டரின் மேல் தொடர்ந்து பல விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் ஓலா ஸ்கூட்டர்களை வாங்க அதிகளவில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர் .
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் கவனத்தை இருக்கும் வகையில் 24 கேரட் தங்கத்தாலான S1 Pro என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Also Read : சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த மந்தனா..!!
Limited Edition ஆக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் Side Stand, ஃபுட் ரெஸ்ட், Rear Mirror-கள், கைப்பிடி, பிரேக் ஆகியவற்றில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
தங்கத்திலான இந்த ஸ்கூட்டரை வாங்க சிலர் முன்வந்த நிலையில் தற்போது ஸ்கூட்டர், விற்பனைக்கு இல்லை என்றும் இந்நிறுவனம் நடத்தும் ஓலா சோனா என்ற போட்டியில் வெல்பவருக்கு இது பரிசாக வழங்கப்படவுள்ளது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.