கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவர் தமது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த மாணவி பாத்திமா நூரா என்பவருடன் நெருங்கி பழகிய நிலையில், அவர்களுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அவர்கள் ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட்டனர். பின்னர் இருவரும் கேரளா திரும்பிய நிலையில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். இதனை அறிந்த அவரது உறவினர்கள், கண்டித்ததுடன் தோழி பாத்திமாவை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர்.
இது குறித்து ஆதிலா கேரள உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த விசாரணையை அவசர வழக்காக ஏற்று கொண்டு விசாரித்த போது இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால், அதற்கு அனுமதி வழங்கி கேரள உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.