Vande Bharat Special Train : சம்மர் ஹாலிடேய்க்கு வந்தாச்சு குட் நியூஸ்…..வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நாள் நீட்டிப்பு…
கோடை விடுமுறை அறிவித்த நிலையில் சுற்றுலா செல்வதற்கும் சொந்த ஊர் செல்வதற்கும் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இதற்காகப் பெரும்பாலானோர் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகச் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இதையும் படிங்க : அரசு பள்ளியில் செறிவூட்டல் அரிசி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!
கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாகச் சிறப்பு ரயில்கள் இயக்கம் மற்றும் , எக்ஸ்பிரெஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பது போன்ற நடவடிக்கைகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.
விடுமுறை காரணமாக ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், அன்ரிசெர்வேர்டு டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்கள் ரிசர்வ்டு பெட்டிகளில் ஏறி பயணிப்பதாக பயணிகள் தரப்பில் அவ்வப்போது புகார் வந்த வண்ணம் உள்ளது..
இந்த புகார்கள் மற்றும் கோடை கால விடுமுறையைக் கருத்தில் கொண்டு முக்கிய வழித்தடங்களில் 240 சிறப்பு ரயில் சேவைகளை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது..

இதனைத் தொடர்ந்து, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதில் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் – எழும்பூர் இடையேயான வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் மே 2 முதல் ஜூன் 27 வரை இயக்கப்படும் Vande Bharat Special Train.
மேலும் வியாழக்கிழமைகளில் மட்டும் பாரத் சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலிருந்தும் இயக்கப்படும்.
அதேபோல், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் எழும்பூர்- நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் – எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மே 3 முதல் ஜூன் 20 வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு சேவைகள் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.