ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காது சனிக்கிழமைகளில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 – 2025ம் கல்வியாண்டில் விடுமுறை முடிந்து ஜுன் 1ம் தேதி அல்லது ஜுன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நிலையில், மக்களவை தேர்தல் முடிவு மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனால், பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் விதமாக நடப்பு கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.
இப்படியான சூழலில், தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், வழக்கம் போல் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதப்பட்டது.
இதையும் படிங்க : “துணை முதல்வர் உதயநிதி..” அமைச்சர் கொடுத்த CLUE ..!
அந்த கடிதத்தில், “அரசு ஊழியர்களைப் போன்று இனி ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிடுமாறு தங்களை வேண்டுகிறோம்.
இந்த முடிவினை விரைந்து எடுக்க சற்று காலதாமதம் ஆகும் என்று நீங்கள் கருதினால் அதுவரை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையும் நான்காம் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்” என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றிக்கையில்..
“2024 – 2025ம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2வது சனிக்கிழமை மற்றும் 4வது சனிக்கிழமை பள்ளி வேளை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஆகஸ்ட் மாதத்தில் 2வது சனிக்கிழமை மற்றும் 4வது சனிக்கிழமை பள்ளி வேளை நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.” என கூறப்பட்டுள்ளது.