உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் கூகுள் நிறுவனம் 10% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுளில் நிர்வாக ரீதியாக பணியாற்றி வரும் ஊழியர்களில் (இயக்குநர், துணைத் தலைவர் பொறுப்புகளில் உள்ள) சுமார் 10% பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பேசுபொருளாக வலம் வருகிறது.
நிறுவன செயல்பாடு, செயல்திறனை மேம்படுத்தவும், AI-ன் ஆதிக்கத்தால் டெக் துறையின் சவால்களை சமாளிக்கவும் இந்த முடிவு என சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read : மகளின் திருமணத்துக்கு உதவியவர் படுகொலை – தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை..!!
கடந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான (12,000 பேர்) ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணியிலிருந்து நீக்கிருந்த நிலையில் தற்போது மேலும் பல ஊழியர்களை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் IT துறையில் பணியாற்றும் நபர்களுக்கு சற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் தொழிநுட்பங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில் மனிதர்களுக்கு வருங்காலத்தில் வேலையின்னை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் IT துறையின் முன்னோடிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.