Indian Navy | இந்திய கடற்படையில் காலியாக உள்ள பைலட், ஏர் ஆபரேஷன்ஸ் ஆபீசர்,ஏர் டிராபிக் கண்ட்ரோலர், லாஜிஸ்டிக்ஸ் உள்பட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த ஆட்சேர்கை அறிவிப்பின் மூலம் 254 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பணிக்கான விவரங்கள்:

கல்வித் தகுதி:
இந்தியக் கடற்படையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி, பி.காம், பி.இ அல்லது பி.டெக், எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி, எம்டெக், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
Indian Navy பைலட், ஏர் ஆபரேஷன்ஸ் ஆபீசர் (2-1-2001 முதல் 1-1-2006-க்கு இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவர்கள்), ஏர்ட்ராபிக் கண்ட்ரோலர் (02-01-2000 முதல் 1-1-2004- இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவர்கள்), லாஜிஸ்டிக்ஸ் (2-1- 2000 முதல் 1-7-2005-க்கு இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவர்கள்) ஆகும்.
தேர்வு முறை:
ஷார்ட் லிஸ்ட், நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதள முகவரி https://www.joinindiannavy.gov.in/ வழியாக அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-3-2024 ஆகும்.